• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தல’ படத்துக்காக லீவு விட்ட ஐடி கம்பெனி!

March 24, 2017 tamilsamayam.com

டோலிவுட் ’பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது கட்டமராயுடு படம்.

தமிழில் ’தல’ அஜித் நடித்த ’வீரம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த படம். இப்படத்தை டோலி இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டிரைலர் யூடியூப்பில் வெளியாகி செம ஹிட் அடித்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸை ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தனர்.

ஆந்திராவைச் சேர்ந்த ஐடி நிறுவனம் ஒன்று கட்டமராயுடு பட ரிலீசுக்காக விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வேலை செய்ய வேண்டும் என அறிவிப்பில் தெர்விக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டிக்கெட்டுகள் முதல் மூன்று நாட்களுக்கு விற்று தீர்ந்துவிட்டது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை ஷ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு உள்ள்து.

மேலும் படிக்க