• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ்2 வீட்டிற்குள் பிக் பாஸ்1 போட்டியாளர்கள் !

September 10, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்றாயன் வெளியேறப்பட்டார்.இதையடுத்து,பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்கில் ரித்விகா மட்டும் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷனுக்கு நாமினேட் ஆனார்.

இந்நிலையில்,இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோவில் போட்டியாளர்கள் இருவரை இந்த வார நாமினேஷனுக்காக தேர்வு செய்ய சொல்கிறார் பிக்பாஸ். ஆனால்,போட்டியாளர்கள் யாரும் சக போட்டியாளர்களை தேர்வு செய்யவில்லை.இதனால் பிக்பாஸ் இந்த வாரம் மூன்று போட்டியாளர்களை நாமினேஷனுக்காக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இரண்டாவது புரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் பிக் பாஸ் 1 போட்டியாளர்களான ஆர்த்தி,காயத்திரி ரகுராம்,சினேகன்,சுஜா வருணி ஆகியோர் வருவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க