• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!

September 18, 2018 தண்டோரா குழு

உலகம் முழுவதும் புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடர் பிக் பாஸ் இந்தியாவில் இந்தியில் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ்,மலையாளம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 12 நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது.இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 8 ஆண்டுகளாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த வருடம் நடந்த சீசனில் பிக்பாஸ் டைட்டிலை நடிகை ஷில்பா ஷிண்டே வென்றார்.நேற்று ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 12ல் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நுழைந்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கிய ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை வழக்கில் இருந்து டெல்லி நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் விடுவித்தது.

இதையடுத்து ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை சமீபத்தில் கேரள உயர்நீதிமன்றம் நீக்கியது.இதை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது.இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற அமர்வு,ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கிய ஒரு நபர் அடங்கிய அமர்வின் உத்தரவை தள்ளுபடி செய்து ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உறுதி செய்தது.

கிரிக்கெட்டிலிருந்து விலகிய ஸ்ரீசாந்த் ஒரு சில படங்களில் நடித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.இந்நிலையில் தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நுழைந்துள்ளார்.2011-ம் ஆண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நினைத்தாராம் அது நடக்காததால் இந்த முறை நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க