September 11, 2018
தண்டோரா குழு
வீரம்,வேதாளம்,விவேகம் படத்தை தொடர்ந்து 4வது முறையாக விஸ்வாசம் படத்தில் அஜித் -சிவா கூட்டணி இணைந்துள்ளது.சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.மேலும்,இவர்களுடன் தம்பி ராமையா,விவேக்,ரோபோ சங்கர்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஸ்வாசம் படத்திற்கு பிறகு நடிகர் அஜித் சதுரங்க வேட்டை பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்க இருக்கிறார்.இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.அஜித் நடிப்பில் ஏற்கெனவே வெளியான தீனா,பில்லா,மங்காத்தா,ஆரம்பம் ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.