• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தின் அடுத்த படம் பிங்க் ரீமேக் இல்லை – இயக்குநர் எச்.வினோத்

November 15, 2018 தண்டோரா குழு

தல அஜித் தற்போது நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தினை தொடர்ந்து தல அஜித் அடுத்ததாக சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஓன்று படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித்துடன்,இயக்குநர் எச்.வினோத்,இப்படத்தினை தயாரிக்கும் போனி கபூர் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளார்கள்.அஜித்தின் 59வது படமாக உருவாகும் இந்த படம் அமிதாப்பச்சன் நடித்து பாலிவுட்டில் வெற்றியடைந்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில்,தல 59 படம் பிங்க் படத்தின் ரீமேக் இல்லை என இயக்குனர் வினோத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க