• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹார்மோனியத்தின் மீது சத்தியமாக சொல்கிறேன் இசையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது – இளையராஜா

January 23, 2019 தண்டோரா குழு

ஹார்மோனியத்தின் மீது சத்தியமாக சொல்கிறேன் இசையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா, சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா, பல்வேறு பாடல்களைப் பாடி மாணவ, மாணவிகளை உற்சாகமூட்டினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர்,

எனக்கு பிடித்த ஒரே கவிஞர் கண்ணதாசன் தான். என்னுடைய ஹார்மோனியத்தின் மீது சத்தியமாக சொல்கிறேன் இசையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ஆனாலும் திரைப்படங்களுக்கு இன்றும் இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று இளையராஜா தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் வேண்டுகோள்படி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தன்னுடைய குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்தி அந்தத் தொகையில் பல்கலை கழக இசைத்துறையில் தன்னுடைய பெயரில் இருக்கை ஒன்றை அமைக்க உள்ளதாக இளையராஜா தெரிவித்தார்.

மேலும் படிக்க