• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் ஆரம்பமாகிறது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 !

May 9, 2019 தண்டோரா குழு

பிரபல தொலைட்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழச்சி பிக் பாஸ் சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் என்றே சொல்லும் அளவிற்கு இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் சீசனில் ஆரவும் இரண்டாவது சீசனில் நடிகை ரித்விக்காவும் டைட்டிலை வென்றனர். இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் 3 மீண்டும் கமலே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கமலை வைத்து பிக் பாஸ் 3 இக்கான ப்ரோமோ படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளது.

இதற்காக சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பிக் பாஸ் வீட்டையொட்டிய செட்டில், கமல்ஹாசன் கலந்துகொண்ட காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ப்ரோமோ ஓரிரு வாரங்களில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிகிறது.மேலும் இந்த ஷோவில் பங்குபெறும் முதல் போட்டியாளராக சாந்தினி தமிழரசன் இருப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. முதல் சீஸனில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, இரண்டாவது சீஸனில் ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்ற வசனத்துடன் கமல் அதிரடி காட்டினார். இந்த சூழலில் பிக் பாஸ் சீஸன் 3-ல் கமல் என்ன சொல்வார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்க