• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடசென்னை 2 படம் கைவிடப்பட்டதா – தனுஷ் விளக்கம்

July 15, 2019 தண்டோரா குழு

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான படம் வடசென்னை. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் மூன்று பாகங்களாக எடுக்கபடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

வடசென்னை படத்தை தொடர்ந்து தனுஷ் மாரி 2 படத்தில் நடித்தார், இப்படத்தை தொடர்ந்து தனுஷ் வடசென்னை 2 படத்தில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து அசுரன் என்றொரு படத்தை தொடங்கினார்கள். இது வெக்கை என்னும் நாவலை மையமாக வைத்து உருவாகும் படமாகும். இதற்கிடையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு இயக்குநர்கள் இல்லாமல் ராட்சசன் இயக்குநர் ராம்குமார் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உள்ளிட்டோரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க தனுஷ் முடிவு செய்துள்ளதாகவும், அது முழுக்க முழுக்க லண்டனில் ஷூட்டிங் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதைபோல் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இப்படி தனுஷ் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் அடுத்து தனுஷ் வடசென்னை 2 வை ட்ராப் செய்துவிட்டார் என்று தகவல்கள் பரவ தொடங்கின. இந்நிலையில் தனுஷ் ஒரு ட்வீட்டை பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை இரண்டாம் பாகம் உருவாகும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் சொல்லுவேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். நன்றி. லவ் யூ…” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க