• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற ரஜினியின் இரண்டாவது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

February 8, 2019 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா- விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். சவுந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் காதல் ஏற்பட்டது. இரு வீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன். இவரும் விவாகரத்து பெற்றவர். மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் எனும் படத்திலும் நடித்துள்ளார். 10,11-ந் தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் திருமணம் நடக்கிறது. திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் அரசியல் பிரபலங்கள், திரைத்துறையை சார்ந்தவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மணமக்களை வாழத்தினர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விதை பைகளை வழங்கி ரஜினி அசத்தியுள்ளார்.

மேலும் படிக்க