• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் இவரா?

November 24, 2021 தண்டோரா குழு

சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்,சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் தீபாவளியன்று வெளியாகி பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தாலும்
வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் அடுத்த யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் பாண்டிராஜ் தற்போது சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கிவருகிறார். படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இயக்குநர் பாண்டிராஜ் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. ஆனால் இயக்குநர் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க