தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. விஜய் தற்போது சர்க்கார் திரைப்பட ஷுட்டிங்கை முடித்துவிட்டு, அட்லி இயக்கும் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.
இதற்கிடையில் விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜய் கலந்து கொள்ளவுள்ளார் என கூறப்பட்டதால், ஏராளமான விஜய் ரசிகர்கள் கல்யாண மண்டபத்துக்கு படையெடுத்தனர்.
இதையடுத்து, இந்த திருமண நிகழ்வில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்து கொண்டார். இதையடுத்து மணமேடை வந்த விஜய், மணமக்களை வாழ்த்தி, பரிசு வழங்கினார். அப்போது விஜய் காண ஆவலுடன் ஏராளமான ரசிகர்கள் மேடையை நோக்கி முன்னேறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போதும் பலர் நெருக்கியடித்ததால், விஜய்யும், அவரது மனைவியும் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே நின்றனர். பவுன்ஸர்கள் எனப்படும் பாதுகாப்பு வீரர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இந்த கூட்ட நெரிசலில் காலில் லேசான காயமடைந்த விஜய், மனைவி சங்கீதாவின் தோளில் கைபோட்டு, பெரும் சிரமத்துக்கு இடையே மண்டபத்தில் இருந்து வெளியேறினார். மண்டபத்துக்கு வெளியேயும் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டதால் போலீஸார் தடியடி நடத்தி, அவரை பத்திரமாக காரில் அனுப்பிவைத்தனர்.
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்