• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோகன் ஜி இயக்கத்தில் நடிக்கும் இயக்குனர் செல்வராகவன் !

December 4, 2021 தண்டோரா குழு

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன் பின் கடந்த ஆண்டு ரிஷி ரிச்சர்ட் நடிப்பில் வெளியான ‘திரௌபதி’ படத்தின் மூலம் பிரபலமானார்.

இப்படம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம்
கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி இயக்கும் அடுத்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் இயக்குநர் மோகன் ஜி தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க