• Download mobile app
27 Jun 2026, SaturdayEdition - 3790
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் மணிரத்னம் – அரவிந்த் சாமி கூட்டணி!

March 14, 2017 tamilsamayam.com

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம், ராம் சரணை இயக்குகிறார் என்பது பழைய செய்தி. அதில் புதிய அப்டேட்டாக நடிகர் அரவிந்த் சாமியும் அந்த படத்தில் இணைய இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் தளபதி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே மற்றும் கடல் ஆகிய படங்களில் நடித்தவர் அரவிந்த் சாமி. நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்த அரவிந்த் சாமி, சமீபத்தில் தனி ஒருவன் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆனார். அதைத்தொடர்ந்து தமிழ்ப்படங்களில் தொடர்ந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுவருகிறார்.

இந்நிலையில் மணிரத்னத்தின் அடுத்தப்படத்தில் அரவிந்த் சாமி நடிக்க இருப்பதை மணிரத்னம் உறுதி செய்திருப்பதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம்
தொடங்குகிறது. இதற்கு முன்னர் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் அரவிந்த் சாமி, ராம் சரண் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க