• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் நட்சத்திர கூட்டணியுடன் மணிரத்னம்!

January 5, 2019 தண்டோரா குழு

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் செக்கச் சிவந்த வானம். இப்படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடித்தனர். விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை சிறந்த மல்டி ஸ்டாரர் படமாக ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணி ரத்னம் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார். கடந்த முறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததை விட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

இப்படத்தை தற்போது, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் ஜெயம் ரவி அல்லது விஜய் தேவரகொண்டாவை வைத்து மறுபடியும் எடுக்கும் முயற்சிகளில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என்ற புதிய தகவலும் தற்போது கசிந்து வருகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் பொங்கலுக்குள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க