• Download mobile app
29 Jan 2026, ThursdayEdition - 3641
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகுமா ?

January 7, 2021 தண்டோரா குழு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ரியா சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் பொங்கலையொட்டி வரும் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் விஜய்யின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டிருந்தது.இந்த சூழலில்
இது விதிமீறல் ஆன செயல் எனவும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் தான் அனுமதி பிறப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசு 100 சதவீதம் இருக்கை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக அரசு என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில்,ஒருவேளை 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி என மறுஉத்தரவு வெளியானால் பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க