• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொன்னியின் செல்வன் வெப் சீரியஸை கையிலெடுத்த சவுந்தர்யா ரஜினிகாந்த்!

January 30, 2019 தண்டோரா குழு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் மற்றும் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கி இருந்தார். கிராபிக்ஸ் டிசைனரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், தற்போது பொன்னியின் செல்வன் வெப் சீரியஸை கையிலேடுதுள்ளார்.

இந்த வெப் சீரிஸ் 10, 11-ம் நூற்றாண்டுகளின் சோழ சாம்ராஜ்ய பேரரசான அருள்மொழிவர்மனின் வாழ்க்கையைப் பற்றிய சரித்திர எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி உருவாக இருக்கிறது. இந்த வரலாற்று வலைத்தொடரின் தயாரிப்பாளர் கிரியேட்டிவ் இயக்குநராக சவுந்தர்யா ரஜினிகாந்த் பணியாற்ற இருக்கிறார். இந்த வலைத்தொடர் தமிழகத்தை ஆட்சி செய்த சோழ அரச பரம்பரையின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய விறுவிறுப்பும், வீரமும், தொன்மையும், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த காவியமாக இருக்கும் என சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து எம்.எக்ஸ். பிளேயரின் தலைமை நிர்வாக அதிகாரி கரண்பேடி கூறுகையில்,

இணைய உலகில் தடம் பதிக்கும் சவுந்தர்யாவுடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறோம். அவருடைய தனித்துவமிக்க, பிரமாண்டமான தொலைநோக்குப் பார்வையுள்ள அணுகுமுறை அசாத்தியமாகவுள்ளது. இணைய பார்வையாளர்களை இந்தப் படைப்பு ஈர்க்கப்போவது உறுதி எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்த வெப் சீரிஸ் மூலக்கதையை உயிரோட்டத்துடன் இணைய மேடையில் கொண்டு வரும் எம்.எக்ஸ். பிளேயர் நிறுவனத்தின் கொள்கையையொட்டியே நிகழ்ந்துள்ளது. இதை இந்தி மட்டுமல்லாமல் மற்ற பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி மொழிகளிலும் கடைபிடிப்போம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க