• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேட்ட – விஸ்வாசம் முதல் நாளில் வசூலில் சாதனை படத்தை படம் எது?

January 11, 2019 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. இரு பெரிய ஹீரோக்களின் படமும் ஒரே நாளில் வெளியானதால் அதனை ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா போல் கொண்டாடினர்.

இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன இந்நிலையில், முதல் நாளில் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் குவித்த படம் எது? என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையிலும், அமெரிக்காவிலும் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியானதால் வசூலிலும் முதலிடத்தை பிடித்திருந்தது.
அந்த வகையில், சென்னையில், பேட்ட ரூ. 1.12 கோடி வசூலித்துள்ளது. விஸ்வாசம் ரூ.88 லட்சம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தமிழ்நாட்டிற்கு வெளியே விஸ்வாசத்தை பேட்ட முந்தியது. கர்நாடகா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் பேட்ட , விசுவாசத்தை விட நன்கு வசூலித்து உள்ளது.

தமிழ்நாடு அளவில் விஸ்வாசம் – ரூ 15.21 கோடி, பேட்ட – ரூ 12. 9 கோடி வசூலாகியுள்ளது என கூறப்படுகிறது.

மேலும் படிக்க