• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

May 8, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சிவகார்த்திகேயனின் 16வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இது மட்டுமின்றி நடிகர்கள் யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, ஆர்கே சுரேஷ், நட்டி நடராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்நிலையில் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க