• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கிறாரா கமல்ஹாசன்? -படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

June 25, 2023 தண்டோரா குழு

மஹாநடி மற்றும் ஜாதி ரத்னாலு போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ப்ரொஜெக்ட் கே'(Project K). சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியன் படமாக உருவாக வருகிறது.

பிரபாஸ் நடிக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை தீபிகா படுகோனே (Deepika Padukone). மேலும் இப்படத்தில் திஷா பதானி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கிய இந்திய திரைநட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், வில்லனாக நடிப்பதாக என்ற தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,

உலக நாயகன் கமல்ஹாசனை எங்களது படத்திற்கு வரவேற்கிறோம்.இதன் மூலம் தங்களது படம் தற்போது உலகளாவிய படமாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. அதோடு வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் “உலகையே முழுமையாக மூடி மறைக்கும் அளவிற்கு நிழலை கொண்ட ஒருவர் தேவைப்பட்டார். அப்படிபட்ட ஒருவர் தான் இருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கமல் பிரபாஷிற்கு வில்லனாக நடிக்கிராக என ரசிகர்களிடையே பெரும் எதிர்பர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க