• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது !

January 3, 2019 தண்டோரா குழு

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் அடுத்த படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.

இப்படத்தை இயக்குனர் ரஞ்சித்தின் சிஷ்யர் அதியன் ஆதிரை இயக்குகிறார். இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு தென்மா இசை அமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்று சென்னையில் துவங்கியது. இந்த படப்பிடிப்பை இயக்குனர்கள் பா.ரஞ்சித், ‘பரியேறும் பெருமாள்’
படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். இன்று துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல நாட்கள் நடைபெறவிருக்கிறது.

மேலும் படிக்க