• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் 25 படங்களை முடித்திருக்கிறேன் ஆதரித்தவர்களும், தடுத்தவர்களுக்கும் நன்றி: வரலட்சுமி

January 25, 2020 தண்டோரா குழு

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி 2012-ல் போடா போட்டி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள வரலட்சுமி, மலையாளம், கன்னடம், தெலுங்குப் படங்களிலும்
நடித்துள்ளார்.

இந்நிலையில் தான் 25 படங்களில் நடித்து முடித்துள்ளது குறித்து வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். .

அதில் அவர் கூறியிருப்பதாவது:

மிகவும் கடினமான, நீளமான பயணம் இது. இந்தக் கட்டத்தை எட்ட நான் பல சவால்களைச் சந்தித்துள்ளேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. எனக்கு எதிராக நின்றவர்களுக்கும் என் தன்னம்பிக்கையை இழக்கச் செய்தவர்களுக்கும் நன்றி. ஏனெனில் அவர்களுடைய எதிர்மறை எண்ணங்களால் தான் நான் வலிமை பெற்று, அவர்களுடைய எண்ணம் தவறு என்று நிரூபிக்க மேலும் தைரியம் பெற்றேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. என் நல்லது, கெட்டதுக்கு நடுவில் என்னுடனேயே இருந்த என் ஒப்பனைக் கலைஞர் ரமேஷ் அண்ணாவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க