• Download mobile app
28 Jan 2026, WednesdayEdition - 3640
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ஆர்யா – சாயிஷா திருமணம் தேதி அறிவிப்பு !

January 31, 2019 தண்டோரா குழு

நடிகர் ஆர்யா, ‘கஜினிகாந்த்’ படத்தில் அவருடன் நடித்த ஹீரோயின் சாயிஷா சேகலை மணக்கிறார். இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் நடக்கிறது.

தமிழில் அறிந்தும் அறியாமலும் படத்தின் அறிமுகமானார் நடிகர் ஆர்யா. அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நயன்தாரா, எமி ஜாக்சன் உட்பட பல்வேறு நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். கடந்த ஆண்டு, நடிகர் ஆர்யா சேனல் ஒன்றில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். ஆர்யா மனதை வெல்லும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரை திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால், அதில் யாரையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை.

இதற்கிடையில், ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்த சாயிஷாவை காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இதனை அவர்கள் மறுக்கவில்லை. சாயிஷா, பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார்-சாயிரா பானு தம்பதியின் பேத்தியாவார்.

ஜெயம் ரவி நடித்த ’வனமகன்’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் கார்த்தியின் ’கடைகுட்டி சிங்கம்’, விஜய்சேதுபதியின் ’ஜுங்கா’ படங்களில் நடித்தார். ’கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இந்நிலையில்,நடிகர்ஆர்யா – சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் மார்ச் 10-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற உள்ள திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க