• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தளபதி 63′ படத்தில் இணைந்த பாலிவுட் பிரபல நடிகர் !

March 21, 2019 தண்டோரா குழு

ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்து
விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் நாள்தோறும் விஜயை காண ரசிகர்கள் கூட்டமாக வந்து செல்கின்றனர். இப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இவர் இதற்கு முன்பு தமிழில் ‘ஆரண்ய காண்டம்’, ‘மாயவன்’ படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க