• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தல 59 படத்தில் அஜித்திற்கு மகளாக நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ?

February 6, 2019 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் தொடர்ந்து நான்கு படங்கள் நடித்தார். இவர்களது கூட்டணியில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக சதுரங்கவேட்டை, தீரன் பட புகழ் எச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படம் பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தில் அஜித்துடன் ஆதிக் ரவிச்சந்திரன், அஷ்வின் ராவ், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ பாண்டே, சுஜித் ஷங்கர் , வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கீர்த்தி குல்ஹாரி, ஆண்ட்ரியா தாரைங், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல் கசிந்து வருகிறது.

நடிகை ஸ்ரீதேவிக்கு தன்னைப் போலவே தனது மகள் ஜான்வி கபூர் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.
ஜான்வியின் முதல் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதே ஸ்ரீதேவி இறந்துவிட்டார். இந்நிலையில் தல 59 படத்தில் ஜான்வி கபூர் கௌரவத் தோற்றத்தில் நடிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க