• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம் – விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி !

October 26, 2018 தண்டோரா குழு

சர்கார் படக்கதையும்,செங்கோல் படக்கதையும் ஒன்றென தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் , முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது. இப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், சர்கார் படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவர் சர்கார் படத்தின் திரைக்கதை தன்னுடையது என்றும் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, சர்க்கார் படத்துக்கு தடை கோரிய வழக்கில் சர்கார் படத்துக்கு தடைவிதிக்க இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. அக்.30க்குள் பதிலளிக்க பட தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 2007ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட உதவி இயக்குநர் வருணின் செங்கோல் படக்கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள “சர்கார்” படக்கதையும் ஒன்று தான். தெளிவாக விவாதித்து, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில், சங்க உறுப்பினரான வருண் என்கிற கே.வி.ராஜேந்திரனின் செங்கோல் என்ற கதையும், சர்கார் படக்கதையும் ஒன்றே என முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், நியாயத்திற்காக, ராஜேந்திரன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதற்கு, தடை செய்ய மாட்டோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதைபோல் ராஜேந்திரனுக்கு முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க