• Download mobile app
28 Jan 2026, WednesdayEdition - 3640
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்சன் படத்தின் டைட்டிலை வெளியிட்ட இசைப்புயல்..!

February 3, 2020 தண்டோரா குழு

2015ம் ஆண்டு ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இன்று நேற்று நாளை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனது அடுத்த படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கினார்.

இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டிலை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். “சிவகார்த்திகேயனின் 14-வது திரைப்படமான இப்படத்திற்கு அயலான்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. Ayalaan – Destination : Earth” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் ஏலியன் தொடர்பான கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க