• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பர்ஸ்ட் லுக்

September 20, 2018 தண்டோரா குழு

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் பிரியதர்ஷினி. இவர் தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில், முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர்.ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது” என ஏற்கெனவே தெரிவித்தார் பிரியதர்ஷினி.

இந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டார். இப்படத்திற்கு ‘த அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று தலைப்பு வைத்துள்ளனர்.இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, விஜய் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் தனித்தனியாக இயக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க