• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எட்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் – முதல் படத்திலேயே சாதனை படைத்த பிரித்வி ராஜ்

April 10, 2019 தண்டோரா குழு

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் லூசிபர். இந்த படமே நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன்,பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திரைக்கு வந்து எட்டே நாளில் உலகம் முழுவதிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூலித்து லூசிபர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதன்படி அமெரிக்காவில் ரூ. 3.48 கோடி, லண்டனில் 2.30 கோடி என பல்வேறு நாடுகளில் மொத்தம் 44 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளதாக லூசிபர் படக்குழு பெருமிதம் கொள்கின்றனர். இளம் இயக்குனரான நடிகர் பிருத்விராஜ் எடுத்துள்ள திரைப்படம் செய்துள்ள சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க