• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எட்டு கெட்டப்பில் கலக்கும் விஜய் சேதுபதி!

June 19, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் பிசியாகவே இருந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அதற்கு ஏற்ப விஜய் சேதுபதியும் தனது கதைகளில் தேர்வு செய்து வருகிறார். அந்தவகையில், அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தில்நடித்து வரும் விஜய் சேதுபதி அப்படத்தில் 8 கெட்டப்களில் நடித்துள்ளார்.

‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கெளதம் கார்த்திக், விஜய் சேதுபதி, காயத்ரி, ரமேஷ் திலக், நிகாரிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அடர்ந்த காடுகளுக்கு முக்கியமான காட்சிகளை படமாக்கியது படக்குழு.

இந்நிலையில், காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் 8 கெட்டப்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளாராம்.பழங்குடி மக்களின் தலைவராக நடித்துள்ள விஜய் சேதுபதி முதல் பாதியில் நகரத்தில் வாழ்பவராகவும், இரண்டாம் பாதி முழுவதும் காட்டுகள் வாழ்வ்து போலவும் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஆறுமுக குமார்.

சுமார் 80% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இன்னும் விஜய் சேதுபதியின் ஒரேயொரு கெட்டப் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 20 வயது இளைஞராக தாடி – மீசை இல்லாமல் நடிக்கவுள்ளதால், தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தாடி – மீசையை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் விஜய் சேதுபதி.

மேலும் படிக்க