• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உறியடி2 படத்தை தயாரிக்கிறார் நடிகர் சூர்யா !

September 19, 2018 தண்டோரா குழு

அறிமுக இயக்குநர் விஜய்குமார் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டுதமிழில் சாதி அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘உறியடி’. இப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்படம் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இதுமட்டுமின்றி பல்வேறு விருதுகளை வென்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விஜய்குமாரே கதையின் நாயகனாக நடித்து, இயக்கவுள்ளாராம்.வெகு விரைவில் இப்படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க