• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ் டுவீட்

May 11, 2019 தண்டோரா குழு

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படத்திலும் நடித்திருந்தார்.

துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம், எஸ்கே 16, மெய் என தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். கனா படத்தின் வெற்றியை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு கனா ரீமேக்கில் நடித்து வருகிறார். நடிப்பில் பிஸியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் வதந்திகள் கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் பரவின. இந்நிலையில் தன்னுடைய திருமணம் தொடர்பாக செய்திக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டரில்,

“மக்களே, நான் எனது காதல் கதை பற்றி வதந்திகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தக் காதலன் யார் என்று எனக்கும் சொல்லுங்கள். தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இப்படியான பொய் செய்திகளைப் பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் உங்களுக்கு அதைச் சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். நான் தனியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க