• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹைதராபாத்தில் நடைபெற்ற நடிகர் விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் !

March 16, 2019 தண்டோரா குழு

நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தலைவர், நடிகர் என தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் விஷால்.தொடர்ந்து இவர் மீது காதல் குறித்து பல்வேறு விமர்சனங்களும், கிசுகிசுக்களும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
அண்மையில் இவற்றிக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷால் தனது காதல் குறித்த தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தார். ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்ற பெண்ணை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கெள்வோம் என்றும் கூறியிருந்தார்.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்தபிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் கூறியிருந்தார். தற்போது கட்டிட பணிகள் இறுதிகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஷாலுக்கும், அலிஷாவுக்கும் இன்று ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய வட்டாரங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க