• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைரலாகும் அஜித்தின் போட்டோ ஷூட்!-துவங்கிவிட்டதா தல 60?

September 10, 2019 தண்டோரா குழு

இந்தி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் எச்.வினோத்தின் இயக்கத்தில் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். போனி கபூர் தயாரித்திருந்த இப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை அடுத்து எச்.வினோத்தின் சொந்த கதையில் நடிக்கிறார் அஜித். இந்தப் படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லார் படமாக உருவாகவுள்ள இப்படத்திற்காக அஜித் தனது உடல் எடையக் குறைத்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. இந்தப் படத்தில் அஜித் பைக் ரேஸராகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படத்துக்கான போட்டோ ஷுட் பணிகள் துவங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘தல 60’ படம் ஆரம்பமாகிடுச்சா என்று ஆச்சர்யமாக புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

“அது பழைய புகைப்படம். இன்னும் போட்டோஷூட் கூட நடத்தவில்லை. அதற்குள் எப்படி படப்பிடிப்பைத் தொடங்க முடியும்? அஜித்துடன் நடிப்பவர்கள் தேர்வு தற்போதுதான் நடைபெற்று வருகிறது என படக்குழு விளக்கமளித்துள்ளது.

மேலும் படிக்க