• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வாசம் படத்தில் பாடிய நாட்டுபுறப்பாடகர் செந்தில் கணேஷ் !

December 11, 2018 தண்டோரா குழு

இயக்குநர் சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

அதைபோல் விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடிச்சு தூக்கு பாடலை நேற்று வெளியிட்டது படக்குழு. அடுத்து டீஸர் எப்போது வெளியிடுவார்கள் என்று ஆவலாக இருக்கின்றனர் தல ரசிகர்கள்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நாட்டுப்புற பாடகரான செந்தில் கணேஷ் இப்படத்தில் பாடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கிராமத்து கதையம்சம் உள்ள இப்படத்திற்கு இவரது குரல் ஏற்றவாறு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க