• Download mobile app
21 Apr 2026, TuesdayEdition - 3723
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜே ரம்யாவின் அடுத்த படம் இந்த டீம்கூடதான்.!

November 9, 2017 cinepettai.com

பிரபல டிவி தொகுப்பாளினி ரம்யா சங்க தலைவன் என்னும் படத்தில் நடிக்கிறார். சின்னத்திரையில் கலக்கிய ரம்யா, விளாயாட்டிலும் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் பவர் லிப்டிங் போட்டியில் கலந்து கொண்டு இரட்டைத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தமிழ் சேனல்களில் இப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் டிடி, அஞ்சனா, ரம்யா என பெண் தொகுப்பாளினிகள் கலக்கி வருகிறார்கள்.

இதில் அவர்களுக்கு சினிமா வாய்ப்புக்களும் சிக்கி விடுகிறது. ஏற்கனவே டிடி நிகழ்ச்சி, சினிமா என கலக்கி வருகிறார். தொகுப்பாளினி ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன் படத்தில் கேரக்டர் ரோல்கள் செய்துள்ளார்.

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார் விஜே ரம்யா. கிடைக்கின்ற கேப்களில் சில படங்களிலும் அவர் நடித்து உள்ளார். இந்நிலையில் சமுத்திரக்கனி நடிக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு நாவலைத் தழுவி அந்த படத்தை உருவாக்க உள்ளதாகவும் கைத்தறி நெசவாளர்களைப் பற்றிய கதையாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதில் கைத்தறி சங்க தலைவராக சமுத்திரக்கனி நடிக்கும் இந்தப்படத்தில் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்திலே ரம்யா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளாராம்.

மணிமாறன் என்கிறவர் இயக்க உள்ள இந்தப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க