• Download mobile app
29 May 2026, FridayEdition - 3761
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் சேதுபதியுடன் இணையும் நயன்தாரா, சமந்தா..!

February 14, 2020

சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அந்தக் கதையில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது.

இதற்கிடையில், புதிய கதையொன்றை தயார் செய்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில், காதலர் தினமான இன்று வாழ்த்துக்களுடன் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் என்று பெரியரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். லலித் குமார் தயாரிக்கிறார்.

2015-ம் ஆண்டு விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் கூட்டணி இணைந்து ’நானும் ரவுடிதான்’ என்ற மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்தது. தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க