• Download mobile app
13 May 2026, WednesdayEdition - 3745
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியை வைத்து இயக்குவதை உறுதி செய்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் !

April 19, 2022 தண்டோரா குழு

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இப்படம் பல்வேறு சாதனைகளை புரிந்து வந்தாலும் விமர்சன ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில், ரஜினியின் அடுத்த 169 படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின்
எதிர்மறையான விமர்சனத்தால் #Thalaivar169 படம் கைவிடப்பட்டதாக. தகவல்கள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெல்சன் தனது டுவிட்டர் முகப்புபக்கத்தில் தலைவர்169 படத்தின் இயக்குனர் என்பதை சேர்த்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க