 April 29, 2019
April 29, 2019  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                3 நாட்களில் 8,384 கோடி வசூல் செய்து அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் சாதனை படைத்துள்ளது.
மார்வல்ஸ் படங்களுக்கு உலகம் முழுவதும் மிக பெரிய வரவேற்பு உண்டு, அதிலும் அவெஞ்சர்ஸ் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மார்வல் சினிமா உலகத்தின் கதையை மையப்படுத்தி உருவானது ‘அவெஞ்சர்ஸ்’ பட தொடர். தற்போது ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்துடன் இந்த தொடர் முடிவடைந்துள்ளது.  
கடைசியாக கடந்த ஆண்டு அனைத்து மார்வல் சூப்பர் ஹீரோக்களும் இணைந்து அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் நடித்திருந்தனர். இதில் அளிக்க முடியாத கொடூர வில்லனாக  தானோஸ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருந்தது. அப்படத்தில் பாதி உலகம் அழிந்து, பாதி கதையுடன் முடிந்ததால், இந்த படத்தின் தொடர்ச்சியாக அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படம் உருவாக்கபட்டது. இதனால் படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில்,கடந்த வாரம் உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம்   வெளியானது. வெளியான 3 நாட்களில் 1.2 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பின்படி 8,384 கோடியாகும். 
இதுவரை முதல் வாரம் அதிக வசூல் செய்த படத்தில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படம் தான் முதல் இடத்தில் இருந்தது. தற்போது  அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம்  அதனை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் 2000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியான இந்த படம் 3 நாட்களில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.