• Download mobile app
14 Mar 2026, SaturdayEdition - 3685
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூப்பர் ஹிட் மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கும் ஆர்.கே சுரேஷ்

September 23, 2020 தண்டோரா குழு

இயக்குநர் பாலா தயாரிப்பில் ஆர்கே சுரேஷ் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டார். விசித்திரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார்.

இப்படம் ஜோசப் என்ற மலையாள படத்தில் ரீமேக் தான். ஜோசப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்தார்.அங்கு நல்ல வரவேற்பு அந்த படம் பெற்ற நிலையில் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.ஜோசப் படத்தை இயக்கிய
எம் பத்மகுமார் விசித்திரன் படத்தினையும் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். இறுதிக் கட்ட பணிகளில் என போஸ்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்பதால் படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று தெரிகிறது. இதனால் விரைவில் இந்த படம் ரிலீஸாக வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க