• Download mobile app
21 May 2026, ThursdayEdition - 3753
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்கள் !

January 16, 2020 தண்டோரா குழு

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ‘மாநாடு’ என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது.

இதற்கிடையில்,சமீபத்தில் மாநாடு படத்தை மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடந்ததது. இதையடுத்து ‘மாநாடு’ படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். இதையடுத்து, இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர், காமெடி நடிகர் கருணாகரன் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க