• Download mobile app
20 Sep 2026, SundayEdition - 3875
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.ஜி.எப்.2 படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் !

August 26, 2020 தண்டோரா குழு

யாஷ் நாயகனாக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான கன்னடப் படம் ‘கே.ஜி.எஃப்’. இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.இதர மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டது.

பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த இந்தப் படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. 2-ம் பாகத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் இன்று மீண்டும் துவங்கியது. அங்குள்ள ஸ்டூடியோவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. மேலும்,இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார். இன்றைய படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். கொரோனா அச்சுறுத்தலுக்கு பின் துவங்கிய முதல் இந்திய படம் கே.ஜி.எப் 2 என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியைத் தவிர, இதர காட்சிகள் அனைத்தும் முடிந்துவிடும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க