• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

August 24, 2019 தண்டோரா குழு

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கவுதம் மேனன் மற்றும் எஸ்கேட் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படம் நீண்ட வருடங்களாகத் தயாரிப்பிலிருந்து வருகிறது. ஏற்கனவே பல முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும்,ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாகவே இப்படம் வெளியாகாமல் இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த சில தினங்களாகப் பட வெளியீட்டுக்கான பேச்சுவார்த்தையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்கு பைனான்ஸ் கொடுத்தவர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் இடம்பெற்றனர். இதில் படம் வெளியீட்டுக்கு ஒரு முடிவுக்கு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட வெளியீடு எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்,’எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது, மேலும், இப்படம் ‘செப்டம்பர் 6-ம் தேதி வெளியீடு’ என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க