• Download mobile app
18 May 2026, MondayEdition - 3750
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆரி – ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடிக்கும் புதிய படம் !

December 3, 2018 தண்டோரா குழு

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் 2 கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் ஐஸ்வர்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது. “அய்யனார்” படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். 60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80’களில் ஜாதி தடையாக இருந்தது.2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் விதமான கதை களம் தான் இப்படம்.

கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தாயாரிக்கும் இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறவுள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க