• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள் வெள்ளிங்கிரி மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும்

March 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் சிவராத்திரியினை முன்னிட்டு வெள்ளிங்கிரி திருக்கோயில், பட்டீஸ்வரர் திருக்கோயில்,கோட்டை ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பொது மக்கள் வழிபாட்டிற்கு சிறப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையினை கருத்திற் கொண்டும், பொது மக்கள் நலனை கருத்திற்கொண்டும், ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள்,குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் ஆகியோர்கள் மலை ஏறுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் அரசால் விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் பின்பற்றி வழிபாட்டுத்தலங்களில் கூட்டமாக தரிசனத்திற்கு கூடுவதை தவிர்க்குமாறும்முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்குமாறும் கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க