• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

February 4, 2022 தண்டோரா குழு

கோவை புலியகுளம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார்(52). இவர் சுங்கம் பணிமனையில் அரசு பஸ் டிரைவராக உள்ளார். கவுண்டம்பாளையம்-காந்திபுரம் வழித்தட பேருந்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், நேற்று உக்கடம் மீன் மார்க்கெட் அருகே வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். பின்னர் அவர் பஸ்சில் பயணித்த பயணி ஒருவருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை பார்த்த டிரைவர் விஜயகுமார் அந்த வாலிபரை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பஸ் டிரைவர் விஜயகுமாரை காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளார். இது குறித்து விஜயகுமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவரை தாக்கியது குனியமுத்தூர் மூவேந்தர் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி அசாருதீன்(19) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க