• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வரி வசூல் இலக்கை அடைந்த வரிவசூலர்களுக்கு விருதுகள் மாநகராட்சி கமிஷனர் வழங்கல்

December 31, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பாக வரி தண்டலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கிடையே வரிவசூல் பணிகளை மேம்படுத்தும் பொருட்டு நடத்தப்பட்ட முனிசிபல் பிரிமியர் லீக் போட்டிகளில், உயர்ந்தபட்ச வசூல் இலக்கை அடைந்த வரிவசூலர்களுக்கு விருதுகளை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சி தனியார் அமைப்புடன் இணைந்து மாநகராட்சி வரிவசூலர்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலர்களுக்கிடையே வரிவசூல் பணிகளை மேம்படுத்தும் பொருட்டு, முனிசிபல் பிரிமீயர் லீக் போட்டிகள் கடந்த நவம்பம் மாதம் 1-ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் நடப்பு 2021-22-ம் நிதியாண்டு துவங்கி நவம்பர் மாதம் வரை வரியில்லா இனங்கள் மற்றும் குடிநீர் கட்டண வசூல் பணிகளில் உயர்ந்தபட்ச வசூல் இலக்கை அடைந்த வரிவசூலர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் இலக்கை அடைந்தவர்களுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் வரியில்லா இனங்களில் நடப்பு வசூல் மற்றும் குடிநீர் கட்டணா வசூலில் முதல் இடத்தினை பிடித்தவர்களுக்கு சாதனையாளர் விருதுடன் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா. மண்டல உதவி கமிஷனர்கள் அண்ணாதுரை (தெற்கு), செந்தில்குமார் ரத்தினம் (கிழக்கு), உதவி வருவாய் அலுவலர்கள், வரி தண்டலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க