• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக உடைக்க சதி நடக்கும் அதற்கு இடம் கொடுக்க கூடாது – நடிகை விஜயசாந்தி

December 17, 2016 தண்டோரா குழு

அதிமுக பிரிக்க சதி நடக்கும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுசெயலாளரும் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையெடுத்து அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

அங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், ஜெயலலிதா மரணம் அடைந்த அன்று வந்து இறுதி அஞ்சலி செலுத்த முடியாத நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா அஞ்சலி செலுத்தி சென்றார்.இந்நிலையில், இன்று மதியம் நடிகை விஜயசாந்தி ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஜெயலலிதாவின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். கட்சியை உடைக்க சதி நடக்கும், அதற்கு இடம் கொடுக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க