• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியை சந்தித்து ராகுல்காந்தி உடல் நலம் விசாரிப்பு

December 17, 2016 தண்டோரா குழு

இந்திய காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி திமுக தலைவர் மு.கருணாநிதியை மருத்துவமணையில் சந்தித்து அவருடைய உடல் நலம் குறித்து சனிக்கிழமை(டிசம்பர் 17) விசாரித்தார்.

திமுக கட்சி தலைவர் மு.கருணாநிதி(93), வியாழக்கிழமை சுவாச கோளாறு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வெள்ளிக்கிழமை(டிசம்பர் 16) குழாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கும் ‘டிரக்யாஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள், உறவினர்கள், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். இதனிடையே, ராகுல் காந்தியும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி கூறுகையில்,”கருணாநிதி உடல் நலம் தேறி வருகிறார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகள்” என்றார்.

இந்நிலையில் டிசம்பர் 2௦ம் தேதி நடக்கவிருந்த திமுக பொதுகுழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் அக்கூட்டத்தின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க