• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதிய தளபதிகளின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் – மனோகர் பாரீக்கர்

December 16, 2016 தண்டோரா குழு

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் புதிய தளபதிகளின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரீக்கர் கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங்கும், விமானப்படை தளபதி அருப் ராஹாவும் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இதனையடுத்து அடுத்த தளபதிகள் யார் என்பதற்கான பரிசீலனை துவங்கியுள்ளது.

இந்நிலையில் தளபதிகள் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தில்லியில் பத்திரிகையாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது; ராணுவ மற்றும் விமானப்படை புதிய தளபதிகள் விரைவில் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்பட்டு நியமிக்கப்படுவார்கள். இதற்கான காலக்கெடு பற்றி இப்போது கூற முடியாது.

அக்னி ஏவுகணை சோதனை நடந்து வருகிறது. இது பற்றி இப்போது கருத்து கூற முடியாது. இந்த வருடம் நடந்த ஏவுகணை சோதனை அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது என்றார்.

மேலும் படிக்க