• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் !

December 3, 2021 தண்டோரா குழு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு முதுநிலை மருத்துவ மாணவர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வழக்கமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் செப்டம்பா் மாதம் தான் நீட் தோ்வு நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளன. அதனால், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை. நீட் தோ்வு எழுதிய 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனா்.

இந்த நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட மருத்துவ மனைகளில் மருத்துவர்களாக பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தற்போது கலந்தாய்வை நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கோவையிலும் அரசு மருத்துமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இரண்டாவது நாளாக இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க